தூத்துக்குடி பசுமை காய்கனி அங்காடியில் ரூ. 27 கோடிக்கு விற்பனை

தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கனி அங்காடியில் இதுவரை ரூ. 26.78 கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கனி அங்காடியில் இதுவரை ரூ. 26.78 கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் 2014 இல் புதிய பேருந்து நிலையம் அருகில் பண்ணை பசுமை காய்கனி அங்காடி தொடங்கப்பட்டது. அங்காடி தொடங்கி 6 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காய்கனிகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள் ஜேசு தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவேந்திரா கே. ரவி, நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இதில், தூத்துக்குடி கூட்டுறவு சரக துணைப் பதிவாளர் போ. ரவீந்திரன், சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல வள அதிகாரி அலெக்ஸ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் வி. அந்தோணி பட்டுராஜ்,  கூட்டுறவு சார் பதிவாளர்கள் சேவியர், சாம் டேனியல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்காடியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4.5 மெட்ரிக் டன் அதாவது ரூ. 1.70 லட்சத்துக்கு காய்கனிகள் விற்பனை செய்யப் படுகிறது. இதுவரை ரூ. 26.78 கோடிக்கு காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com