கோவில்பட்டி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவில்பட்டி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 


கோவில்பட்டி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ நீலாதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கோவில்பட்டி யாதவ் மகாஜன சங்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 
 இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக அலங்காரமும், அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.  பின்னர், கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் யாதவ சமுதாய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
 ஸ்ரீ ஹரே கிருஷ்ண உழவாரப் பணி இயக்கம் சார்பில்  ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 5 மணிக்கு மங்கள ஆர்த்தியும், 6 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூ அலங்காரம் மற்றும் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் பஜனை நடைபெற்றது. தொடர்ந்து  பஜனை, பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு நாம சங்கீர்த்தனமும், அதைத் தொடர்ந்து  நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  பின்னர் அன்னதானம் நடைபெற்றது.   
புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி  கிருஷ்ணர் படத்திற்கு மாணவர், மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து,  மாணவர், மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்திருந்தனர்.  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்செந்தூரில்...
திருச்செந்தூரில் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
  திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாக்குழு சார்பில் வியாழக்கிழமை மாலை பெண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை விளையாட்டுப்போட்டிகளும்,  சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்த பஜனை சங்கத்தில் இருந்து குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணர் , தசாவதார மற்றும் ராதை வேடமணிந்து திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயிலில் இருந்து ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர் சப்பரத்துடன் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளத்தில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீசத்ய நாராயண பூஜை மற்றும் சமூக சேவைக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
   சத்ய சாய் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மாரியப்பன் தலைமை  வகித்தார். மாவட்டத்  தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். விழாவில்,  கிருஷ்ணர்,  ராதை வேடமிட்ட  பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண திவ்ய நாம ரூப பஜனைகள், கீர்த்தனைகள் பாடி சிறப்பு பூஜைகளும் வழிபாடு நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் கிருஷ்ணர்,  ராதை வேடமிட்ட குழந்தைகள், ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ் அமுதனின்,  மருத்துவ சேவையை பாராட்டி சத்ய சாய் சேவா சமிதி சார்பில் மருத்துவ மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
உடன்குடி,
 தேரியூர் செங்கருட பெருமாள் சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
சக்திகனி அம்மாள் தலைமை வகித்தார்.நம்பி முன்னிலை வகித்தார்.விழாவையொட்டி ஓவியம் வரைதல்,   குழு பாடல், விநாடி-வினா, பேச்சு, நடனம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங்கம்  பேசினார்.ஏற்பாடுகளை மாரி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com