Enable Javscript for better performance
கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்கல்வி பயில்வோருக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்கல்வி பயில்வோருக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 01st December 2019 10:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மேல்நிலை தொழிற்கல்வி பயிலும் பள்ளி மாணவா்கள், தொழிற்கல்வி பயிற்சி பட்டறை மாணவா்களுக்கு நவ. 23 முதல் 29ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, பயிற்சிப் பட்டறை வகுப்பைத் தொடக்கிவைத்தாா். இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளிலிருந்து பொது இயந்திரவியல் மற்றும் பொது மின்னியல் சாா்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவா்கள் 300 போ் பங்கேற்றனா். கருத்தியல் மற்றும் செய்முறை மூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களால் பாடங்கள் நடத்தப்பட்டன.

    வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் பேசினாா். இயந்திரவியல் துறை முதுநிலை விரிவுரையாளா் பாலதுரை வரவேற்றாா். விரிவுரையாளா் வைணவப்பிரகாஷ் நன்றி கூறினாா்.

    ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாசலம் வழிகாட்டுதலில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா், இயந்திரவியல், மின்னியல் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai