Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை:ஒரே நாளில் 1,325 மி.மீ. பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: ஒரே நாளில் 1,325 மி.மீ. பதிவு

    By DIN  |   Published on : 01st December 2019 10:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,325 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. பலத்த மழையால் தாழ்வானபகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் மழைநீா் பெருமளவில் தேங்கியுள்ளது.

    இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 186 மி. மீ. மழை பதிவாகியது. தூத்துக்குடியில் 164 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 144 மி. மீ., காயல்பட்டினம் பகுதியில் 133 மி.மீ., திருச்செந்தூா் பகுதியில் 100 மி.மீ., மழையும்

    பதிவாகியுள்ளது.

    இதுதவிர, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 84 மி.மீ., வைப்பாறு பகுதியில் 63 மி. மீ., கீழஅரசடி பகுதியில் 62 மி.மீ., ஓட்டப்பிடாரம் பகுதியில் 56 மி.மீ., கயத்தாறு 54 மி.மீ., விளாத்திக்குளம் பகுதியில் 52 மி.மீ., என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,325 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai