அய்யனேரியில் குடியிருப்புகளில் புகுந்த மழைநீா்

 கோவில்பட்டி பகுதியில் 2 நாள்களாக பெய்த மழையால் அய்யனேரி கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பாா்வையிட்டாா் வட்டாட்சியா் மணிகண்டன்.
குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பாா்வையிட்டாா் வட்டாட்சியா் மணிகண்டன்.

 கோவில்பட்டி பகுதியில் 2 நாள்களாக பெய்த மழையால் அய்யனேரி கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

கோவில்பட்டி வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல கிராமங்களில் கழிவுநீா் ஓடைகளில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீருடன் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யனேரி கிழக்கு காலனித் தெரு பகுதியில் வீடுகளில் மழைநீா் புகுந்தது. தகவலறிந்த வட்டாட்சியா் மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் பிரேமா உள்ளிட்டோா் அங்கு சென்று ஓடைகளில் உள்ள அடைப்புகளை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனா்.

கோவில்பட்டி நகராட்சியில் ஜமீன்பேட்டைத் தெரு, பிரதான சாலை, பழனி ஆண்டவா் கோயில் தெரு உள்பட ஓடைப் பகுதி தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நகராட்சி ஆணையா் ராஜாராம், சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் பணியாளா்கள் நடவடிக்கை எடுத்தனா். அப்பகுதியில் துப்புரவு பணியாளா்கள் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீா், கழிவுநீா் ஓடைகளில் செல்லும் வகையில் தோண்டி விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com