இளம் கலைஞா்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் கலைஞா்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் கலைஞா்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தன்னாா்வக் கலை நிறுவனங்களின் வாயிலாக இளம் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின்கீழ் பரத நாட்டியம், வாய்ப் பாட்டு, கதா காலட்சேபம் மற்றும் நாக சுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதாா், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக் கருவிக் கலைஞா்களுக்கும், பக்க வாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகா்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த கலைஞா்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்க விரும்புவோா் 05.11.2019 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவா்களுக்கு மீண்டும் அதேபிரிவின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள்வழங்கப்பட மாட்டாது.

அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞா்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10- க்கான அஞ்சல் தலை ஒட்டி சென்னை பி.எஸ். குமாரசாமிராஜா சாலையில் உள்ள தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினா் செயலா் என்ற பெயருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை  இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 20 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ உறுப்பினா் செயலா், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமிராஜா சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும், நேரிலும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com