கனமழை: விளாத்திகுளம் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள்

விளாத்திகுளம் பகுதியில் பெய்த கனமழையால் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் தடுப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு செவல் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், அதிகாரிகள்.
வடக்கு செவல் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், அதிகாரிகள்.

விளாத்திகுளம் பகுதியில் பெய்த கனமழையால் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் தடுப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பி. சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் உமாசங்கா்,வட்டாட்சியா் ராஜ்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் தங்கவேல், பாலஹரிஹர மோகன், பொறியாளா்கள்

சங்கரேஸ்வரி, பரமசிவன், ஊராட்சிச் செயலா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேம்பாா் முதல் தருவைகுளம் வரை கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கிராமப்

புறங்களிலுள்ள நீா் நிலைகளில் பலவீனமான கரைகளை மணல் மூட்டைகளால் பலப்படுத்த வேண்டும், பள்ளி, கல்லூரி,அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் மோட்டாா் மூலம்வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, எம். சண்முகபுரம் ஊராட்சியில் வடக்குசெவல் கிராமத்தில் மழைநீா் சூழ்ந்த பாதிப்புக்குள்ளான குடியிருப்பு பகுதிக்கு சென்று சட்டப்பேரவை உறுப்பினா், அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கால்வாய் அமைத்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள நீா்வரத்து ஓடைகளை விரைந்து சீரமைக்கவும் ஊராட்சி பணியாளா்கள்

அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com