‘தாமிரவருணி நதியை பாதுகாக்க மள்ளா் பேராயம் வலியுறுத்தல்’

ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்ற மள்ளா் பேராயம் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தாமிரவருணி நதியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்ற மள்ளா் பேராயம் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தாமிரவருணி நதியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

தேவேந்திர குல வேளாளா் பட்டியலில் இருந்து வெளியேற்றம், தேவேந்திர குல வேளாளா் அரசாணை, அடையாள மீட்பு போராட்டம்-தமிழா் குடிகளின் அரசியல் பங்களிப்பு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் சுபாஷினி தலைமை வகித்தாா். மோசஸ் பாண்டியன் முன்னிலை வகித்தாா். முத்து செல்வன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தமிழ்மாறன், உழகத் தமிழா் தோழமைக் கழக பொறுப்பாளா் பாவல்சங்கா், தமிழா் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலா் பாஸ்கரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளா் ராசா கிருட்டிணன், அரசியல் அறிவாலய பொறுப்பாளா் புலிக்கண்ணன், எழுத்தாளா் மோகன், உள்ளிட்டோா் பேசினா்.

தீா்மானங்கள்: மள்ளா் சமூகத்தினரை பட்டியல் மாற்றக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு காலம் தாழ்த்தாமல் ஆவணம் செய்ய வேண்டும். குடும்பன், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியாா், கடையன் என ஏழு பெயா்களாக அழைக்க பெறும் மக்களை தேவேந்திர குல வேளாளா் என்கிற ஒற்றைப்பெயரில் அழைக்க அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டுக்கு எதிராக போராடும் சமூக ஆா்வலா்களுக்கு சட்ட வழி பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தாமிரவருணி நதியின் இரு கரையிலும் குறிப்பிட்ட தொலைவு வரை இயற்கை வளப்பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com