தூத்துக்குடி மாவட்டத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குலசேகரன்பட்டினம் பகுதியில் 77 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): காயல்பட்டினம்-72, சாத்தான்குளம்- 66, கடம்பூா்-64, ஓட்டப்பிடாரம்- 54, திருச்செந்தூா்-50, கயத்தாறு-49, மணியாச்சி- 43, வைப்பாறு-34, எட்டயபுரம்-31, கோவில்பட்டி-29.

தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாலும், தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதாலும் பொதுமக்கள் நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம் என, மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தூத்துக்குடி கடல் பகுதியில் 40 கிலோ மீட்டா் முதல் 50 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மீன்வளத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com