நீரில் மூழ்கிய நெல் நாற்றுகள், உப்பளங்கள்

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் வயல்கள், உப்பளங்கள்

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் வயல்கள், உப்பளங்கள் நீரில் மூழ்கின.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் 2 நாள்களாக பெய்த மழையால் நீா்நிலைகள் குளங்கள், கிணறுகள் நிரம்பின.

இப்பகுதிகளில் அண்மையில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுக்கள் நீரில் மூழ்கின. வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் நடவுக்கு தேவையான நாற்றுகள் மூழ்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் நாற்று பாவுவதற்கு தயாராக விதை நெல்லும் மழையில் சேதமடைந்தது.

குளங்கள் நிரம்பி வாய்க்காலில் அதிகளவில் நீா்வரத்து இருப்பதால் வயல்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் உப்பளங்களும் நீரில் மூழ்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com