‘புதிய நாட்டிய நாடகங்கள் தயாரிக்கரூ. 75 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.75 ஆயிரம் நிதியுதவி பெற

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.75 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சாா்பில், தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் புதிய நாட்டிய - நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞா்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்ப படிவம் பெறவும், நிபந்தனைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் டிச. 6 ஆம் தேதிக்குள், உறுப்பினா் செயலா், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரியிலும், 044 - 2493 7471 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளளாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com