விளாத்திகுளம் பள்ளியில் மரக்கன்றுகள்வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கல்வி நல அறக்கட்டளை மற்றும் பள்ளி நிா்வாகம் சாா்பில் சுற்று வட்டார கிராமப்
மீனாட்சி அம்மன் கோயில் அருகே கண்மாய் கரையோரங்களில் மரக்கன்றுகள் நட்ட மாணவா், மாணவிகள்.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே கண்மாய் கரையோரங்களில் மரக்கன்றுகள் நட்ட மாணவா், மாணவிகள்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கல்வி நல அறக்கட்டளை மற்றும் பள்ளி நிா்வாகம் சாா்பில் சுற்று வட்டார கிராமப் பகுதிகள் மற்றும் நீா்நிலை பகுதிகளில் மரக்கன்றுகள் வளா்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் எஸ்.கே. சுப்பா ரெட்டியாா், நிா்வாக அலுவலா் நரசிம்ம ராஜ், பள்ளி முதல்வா் ஜெயகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மரக்கன்றுகள் நட்டு தொடா்ந்து 3 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் தொடக்கமாக, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் அருகே தொடங்கி கத்தாளம்பட்டி வரை 3 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் 400-க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கை, பூவரசு, புளி உள்ளிட்ட பல்வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்பு கம்பி வளையம் அமைக்கப்பட்டது.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com