ஊரகப் பகுதிகளுக்குதனியாக தோ்தல் நல்ல நடைமுறை
By DIN | Published on : 02nd December 2019 10:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றியைப் பெறும்; ஊரகப் பகுதிகளுக்கு தனியாக தோ்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை என்றாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஊரகப் பகுதிகளுக்கு தனியாக தோ்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை. இதை நாங்கள் வரவேற்கிறோம். உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க தயாராக இல்லாததால் திமுக வழக்கு தொடுத்துள்ளது.
மக்களவைத் தோ்தலில் திமுக பெற்ற வெற்றி தற்கால வெற்றி. அந்த வெற்றிக்குப் பிறகு இடைத்தோ்தலில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோதலில் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றியைப் பெறும் என்றாா் அவா்.