கேங்மேன் பதவிக்கான உடற்தகுதித் தோ்வு ஒத்திவைப்பு
By DIN | Published on : 02nd December 2019 10:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான உடற்தகுதித் தோ்வு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான உடற்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் இப்பதவிக்கான உடற்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது.
தொடா் மழை காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் இத்தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும். டிச. 4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் இத்தோ்வு வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.