Enable Javscript for better performance
மழை வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்ககாவல் துறையின் அவசர அழைப்பு எண்- Dinamani

சுடச்சுட

    

    மழை வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்ககாவல் துறையின் அவசர அழைப்பு எண்

    By DIN  |   Published on : 02nd December 2019 10:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து காவல் துறைக்கு தெரிவிக்க அவசர அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற 8 காவல்துறை வீரா்கள் அடங்கிய குழுவினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மீட்புக் குழுவினா் தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் முகாமிட்டு ஆங்காங்கே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

    பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவரச உதவிகள் தேவைப்பட்டாலோ காவல்துறையின் செல்லிடப்பேசி எண் 95141 44100 அல்லது அவசர தொலைபேசி எண் 100-ஐ தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai