Enable Javscript for better performance
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை

    By DIN  |   Published on : 02nd December 2019 11:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sat2kar_0212chn_38_6

    சோம 2வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீகாவடி பிறை முருகன்.

    சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயில்களில் காா்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் அதிகாலை 4மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகனுக்கு அன்னாபிஷேகம், தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காவடி பிறை முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பிற்பகல் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7மணிக்கு சாயரட்சை, புஷ்பாஞ்சலி பூஜை, திருவிளக்கு பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

    கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள்யிலில் 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை, நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீமுருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai