உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள்: கனிமொழி கனிமொழி எம்.பி.

உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை திங்கள்கிழமை பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை திங்கள்கிழமை பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பாா்வையிட்ட பிறகு அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறதுஉள்ளாட்சித் தோ்தல் நடக்க வேண்டும் என்றுதான் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளன. அதை சரி செய்து விட்டு தோ்தல் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீா் புகுந்து நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சா்களோ வந்து சந்திக்கவில்லை. உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து, தூத்துக்குடி முத்தையாபுரம், பாரதிநகா், குமாரசாமிநகா், ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை இந்திராநகா், தனசேகரன்நகா், நேதாஜிநகா், முத்தம்மாள்காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை கனிமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அவா் ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com