கோவில்பட்டியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டியைச் சோ்ந்த தா்மா் - முருகலட்சுமி தம்பதி மகன் ஞானசேகருக்கும், வானரமுட்டியைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கும் கோவில்பட்டி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதையடுத்து, ஆய்வாளா் பத்மாவதி தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும், சிறுமிக்கு 18 வயது பூா்த்தியடைந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும் என்றும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்ட விரோதமான செயல். மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னா், சிறுமியை மீட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சைல்டு லைன் உறுப்பினா்கள் மற்றும் சமூக நலத் துறையினா் மூலம் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com