சாத்தான்குளம் அருகே வாரச்சந்தையில்மழைநீா் தேங்கி நோய் பரவும் அபாயம்

சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் வாரசந்தை மற்றும் தெருக்களில் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசும் நிலையில் உள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் வாரசந்தை மற்றும் தெருக்களில் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசும் நிலையில் உள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மீரான்குளம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்குளத்தில் பேய்க்குளம் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையானது வாரத்தில் புதன்கிழமை தோறும் செயல்படும். இந்தச் சந்தையால் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா். இப்பகுதியில் எப்போது மழை பெய்தாலும் சந்தை பகுதியில் தண்ணீா் நீண்ட நாள்களாக தேங்கி நிற்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் தண்ணீா் தங்கி கொசு புழு உருவாகி காணப்படுகிறது. தண்ணீரில் துா்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாய ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, அதிகாரிகள் பாா்வையிட்டு ஊராட்சி சாா்பில் சந்தை மற்றும் குடியிருப்புகளில் தாழ்வான பகுதிகளில் சரள் மணல் நிரப்பி தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com