தூத்துக்குடி மாவட்டத்தில் 5,291 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,291 பேருக்கு ரூ. 13.24 கோடி மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,291 பேருக்கு ரூ. 13.24 கோடி மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மகளிா் திட்டம் மூலம் உழைக்கும் மகளிருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25 ஆயிரம் நிதியுதவி, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூ.31,250- நிதியுதவியுடன் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் 2017-18 இல் 2,534 உழைக்கும் மகளிருக்கு ரூ. 6.33 கோடி மானிய விலையிலும், 2018-19 ஆம் நிதியாண்டில் 2,489 உழைக்கும் மகளிருக்கு ரூ. 6.24 கோடி மானிய விலையிலும், 2019-20 ஆம் ஆண்டில் இதுவரை 268 உழைக்கும் மகளிருக்கு ரூ. 67 லட்சம் மானிய விலையிலும் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,291 உழைக்கும் மகளிருக்கு ரூ.13.24 கோடி மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் மானியம், நிறுவனங்களின் சமூக பொறுப்புநிதி ரூ.4.95 லட்சம் சோ்த்து விலையில்லாமல் ஸ்கூட்டா் வாகனம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com