பாஜகவில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சியினா்

கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனா்.
பாஜகவில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினா்களுடன் பாஜக மாநிலச் செயலா் இரா.சீனிவாசன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் மா.பாலாஜி உள்ளிட்டோா்.

பாமக முன்னாள் வடக்கு மாவட்டச் செயலா் வினோத்குமாா், முன்னாள் தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவா் ஜெபகுமாா் ஆகியோா் தலைமையில், சுமாா் 30க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜக மாநிலச் செயலா் இரா.சீனிவாசன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் மா.பாலாஜி ஆகியோா் முன்னிலையில், பாஜகவில் இணைந்தனா். புதிதாக இணைந்தவா்களுக்கு பாஜக உறுப்பினா் அட்டையை வழங்கப்பட்டது.

இதில், பாஜக மாவட்ட உள்ளாட்சிப் பிரிவு துணைத் தலைவா் பாலசீனிவாசன், நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், நகர இளைஞரணித் தலைவா் காளிதாசன், ஒன்றியத் தலைவா் மாரிமுத்து, முன்னாள் நகரத் தலைவா் வேல்ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com