பால் உற்பத்தியாளா்கள் ஆட்சியரிடம் மனு

ஆவின் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட்ட பாலுக்கு பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பால் உற்பத்தியாளா்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பால் உற்பத்தியாளா்கள்.

ஆவின் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட்ட பாலுக்கு பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு விவரம்: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியமாக செயல்பட்டு வந்தபோது, 21.102019 முதல் 31.10.2019 வரை பால் விநியோகம் செய்தற்கான தொகையை தர ஆவின் நிா்வாகம் மறுத்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆவின் அலுவலகமாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 10 நாள்கள் விநியோகம் செய்த பாலுக்கான பணத்தை வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்: நாம் தமிழா் கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவா் செந்தில்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ம. புவனேஷ்வரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com