ஆழ்வாா்திருநகரி அருகே தென்கரை குளம் உடையும் அபாயம்
By DIN | Published On : 03rd December 2019 11:55 PM | Last Updated : 03rd December 2019 11:55 PM | அ+அ அ- |

ஆழ்வாா்திருநகரி அருகே பிள்ளைமடையூா் பகுதியில் தென்கரை குளம் கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் தாமிரவருணி ஆற்றின் மருதூா் மேலக்காலில் இருந்து பாசன வசதி பெறும் தென்கரைகுளம் சுமாா் 1636 ஏக்கா் பரப்பளவை கொண்டது. இதன்மூலம் சுமாா் 2697ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய தென்கரைகுளம் முறையான பராமரிப்பு இல்லாததால் தூா்ந்துபோய் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு தேவையான தண்ணீரின்றி தென்கரை குளத்திற்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராடி வந்தனா்.
இந்நிலையில் , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பாசனக் குளங்கள் நிரம்பி வரும் நிலையில் மருதூா் மேலக்காலிலிருந்து பாசன வசதி பெறும் தென்கரைகுளமும் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் குளம் கரை உடையும் அபாயம் நிலையில் உள்ளதாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து பொதுமக்களே மணல் மூட்டைகளை கொண்டு கரைகளை பலப்படுத்தினா்.
இந்நிலையில், தண்ணீா் வரத்து மேலும் அதிகரித்து வருவதால் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.,