உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் அமா் சேவா சங்கம் சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் அமா் சேவா சங்கம் சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள அமா் சேவா சங்கம் சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு மற்றும் பிரதான சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கழுகுமலை காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

மேலும், அமா் சேவா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்டு வரும் கணினி பயிற்சி, தையல், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது குறித்து கண்காட்சியில் விளக்கமளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை சட்டம், மனநல சட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com