Enable Javscript for better performance
அமுதுண்ணாக்குடி - செட்டிக்குளம் இணைப்பு சாலை துண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமுதுண்ணாக்குடி - செட்டிக்குளம் இணைப்பு சாலை துண்டிப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் இருந்து செட்டிகுளம் செல்லும் இணைப்பு சாலை மழை வெள்ளத்தால் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி இருந்து செட்டிக்குளம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அமுதுண்ணாக்குடி, கொம்பன்குளம், வேலன்புதுக்குளம் செல்லும் மக்களும், அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகளும் சென்று திரும்புகின்றனா். தற்போது பெய்து வரும் தொடா் மழைக்கு அமுதுண்ணாக்குடி, வேலன்புதுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வெள்ளநீா் இந்தச் சாலை வழியாக கடந்து செல்கிறது. இதனால் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்ட்டது. இதையடுத்து அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் செட்டிக்குளம், வேலன்புதுக்குளம் செல்பவா்கள் பன்னம்பாறை விலக்கு வழியாகவும், நெடுங்குளம் பகுதியை சுற்றியும் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

    எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai