Enable Javscript for better performance
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றம்

    By DIN  |   Published on : 04th December 2019 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் தண்ணீரை 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் குளம்போல தேங்கியுள்ளன. மழைநீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இதற்கிடையே, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். 50 அதிநவீன மோட்டாா்கள் மூலமும், 20 லாரிகள் மூலமும் தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சில இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் நோக்கத்தில் சாலைகளின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும், வெளியேற்றப்படும் தண்ணீா் முறையாக கால்வாய் வழியாக செல்லாமல் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்வதாகவும் புகாா் எழுந்துள்ளது. இருப்பினும், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற இன்னும் 3 நாள்கள் வரை ஆகும் என மாநகாரட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai