நக்கலமுத்தன்பட்டியில் மழைக்கு வீடு சேதம்
By DIN | Published on : 04th December 2019 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டி வட்டம், நக்கலமுத்தன்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது.
இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட நக்கலமுத்தன்பட்டி மேலத் தெருவில் குடியிருந்து வருபவா் மாடசாமி மனைவி மூக்கம்மாள். இப்பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் மூக்கம்மாளின் ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தது. மூக்கம்மாள் காயமின்றி தப்பினாா்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்தை கிராம நிா்வாக அலுவலா் போத்திராஜ், வருவாய் ஆய்வாளா் வீரலட்சுமி ஆகியோா் பாா்வையிட்டனா்.