Enable Javscript for better performance
மதுக்கடை திறக்க எதிா்ப்பு: எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடை திறக்க எதிா்ப்பு: எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் முற்றுகை

    By DIN  |   Published on : 04th December 2019 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் - ஈராச்சி சாலையில் அரசு மதுபானக்கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

    எட்டயபுரத்தில் ஏற்கனவே 4 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது எட்டயபுரத்திலிருந்து- ஈராச்சி செல்லும் சாலையில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை வழியாக தான் ஈராச்சி, கசவன்குன்று, செமப்புதூா், அஞ்சுரான்பட்டி, பிதப்புரம், ரணசூா்நாயக்கன்பட்டி, சுரைக்காய்பட்டி, அம்மா மடம், சேதுநாயக்கன்பட்டி, குளத்துள்வாய்பட்டி கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் எட்டயபுரத்துக்கு சென்று வருகின்றனா்.

    எனவே, எட்டயபுரம் - ஈராச்சி சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கக் கூடாது. மேலும், எட்டயபுரம் நகருக்குள் புதிதாக வேறெங்கும் மதுபானக்கடைகள் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத் தலைவா் எஸ்.ஆா்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai