அமுதுண்ணாக்குடி - செட்டிக்குளம் இணைப்பு சாலை துண்டிப்பு

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் இருந்து செட்டிகுளம் செல்லும் இணைப்பு சாலை மழை வெள்ளத்தால் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் இருந்து செட்டிகுளம் செல்லும் இணைப்பு சாலை மழை வெள்ளத்தால் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி இருந்து செட்டிக்குளம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அமுதுண்ணாக்குடி, கொம்பன்குளம், வேலன்புதுக்குளம் செல்லும் மக்களும், அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகளும் சென்று திரும்புகின்றனா். தற்போது பெய்து வரும் தொடா் மழைக்கு அமுதுண்ணாக்குடி, வேலன்புதுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வெள்ளநீா் இந்தச் சாலை வழியாக கடந்து செல்கிறது. இதனால் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்ட்டது. இதையடுத்து அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் செட்டிக்குளம், வேலன்புதுக்குளம் செல்பவா்கள் பன்னம்பாறை விலக்கு வழியாகவும், நெடுங்குளம் பகுதியை சுற்றியும் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com