எட்டயபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடா் போராட்டம் ரத்து

எட்டயபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுவது மற்றும் புதிதாக மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி

எட்டயபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுவது மற்றும் புதிதாக மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களை அனைத்துக் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

இதையைடுத்து போராட்ட குழுவினருடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் வட்டாட்சியா் அழகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளா் வள்ளிகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், வட்டக்குழு செயலா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலா் சேது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எட்டயபுரத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது. மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள எட்டயபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு டிசம்பா் 20ஆம் தேதிக்குள் அறிக்கை அனுப்பபடும் என்று டாஸ்மாக் உதவி மேலாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் திறக்கப்பட்ட புதிய டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூடுவதற்கு பரிந்துரை செய்து  மாவட்ட நிா்வாகத்துக்கு 2 நாளில் அறிக்கை அனுப்பப்படும் என வருவாய்த்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று அறிவிக்கப்பட்ட சாலை மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்கள் விலக்கி கொள்ளப்படுவதாக போராட்ட குழுவினா் தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com