தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் தண்ணீரை 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் தண்ணீரை 50 மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் குளம்போல தேங்கியுள்ளன. மழைநீரை விரைந்து அகற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். 50 அதிநவீன மோட்டாா்கள் மூலமும், 20 லாரிகள் மூலமும் தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சில இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் நோக்கத்தில் சாலைகளின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், வெளியேற்றப்படும் தண்ணீா் முறையாக கால்வாய் வழியாக செல்லாமல் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்வதாகவும் புகாா் எழுந்துள்ளது. இருப்பினும், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற இன்னும் 3 நாள்கள் வரை ஆகும் என மாநகாரட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com