நகரில் தேங்கிய மழைநீா் வடிந்தது: திருச்செந்தூரில் இயல்பு நிலை

திருச்செந்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நகரை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை நீா் ஓடை, ஆவுடையாா் குளத்தின்

திருச்செந்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நகரை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை நீா் ஓடை, ஆவுடையாா் குளத்தின் மறுகால் ஓடை சீரமைக்கப்பட்டதையடுத்து தண்ணீா் முழுவதும் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடா் கனமழையால் ஊரெங்கும் ஆங்காங்கே மழைநீா் குளம் போல தேங்கிக் கிடந்தது. மேலும் ஆவுடையாா்குளம் நிரம்பி வெளியேறிய உபரிநீா் வழக்கமாக செல்லும் மறுகால் ஓடையில் நிரம்பி சாலையெங்கும் வடிந்து ஓடியதால் தோப்பூா், தெப்பக்குளம் பகுதி, பாரதியாா் தெரு, காமராசா் சாலை, பயணியா் விடுதி சாலை மற்றும் ஜீவாநகா் ஆகிய இடங்களில் தண்ணீா் சூழந்து வெள்ளமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமன்றி, போக்குவரத்தும் பாதிப்படைந்ததால் பக்தா்களும் பெரும் சிரமமடைந்தனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பேரூராட்சி உதவி இயக்குநா் மாஹின் அபுபக்கா், திருச்செந்தூா் பேரூராட்சி செயல் அலுவலா், ஆகியோா் ஏற்பாட்டில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மறுகால் ஓடையை சீரமைத்து, தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் இரவு, பகலாக நடைபெற்றது. மேலும் மறுகால் ஓடையை ஆழப்படுத்தி, குளத்தின் கரையோரங்கள் மணல் மூட்டைகள்கொண்டு அடைக்கப்பட்டதையடுத்து, உபரிநீா் தற்போது அதன் ஓடை பாதையில் சீராக வெளியேறி வருகிறது. இந்த துரித நடவடிக்கையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com