புதூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுகட்சியினா்
By DIN | Published On : 05th December 2019 05:02 PM | Last Updated : 05th December 2019 05:02 PM | அ+அ அ- |

புதூரில் நடைபெற்ற விழாவில் அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளிலிருந்து 50க்கும் மேற்பட்டோா் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் அதிமுகவில் சேரும் இணைப்பு விழா நிகழ்ச்சி புதூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் தலைமை வகித்தாா். புதூா் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் தனஞ்செயன், புதூா் ஒன்றிய செயலா் ஞானகுருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இணைப்பு விழாவில் புதூா் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலா் ராமமூா்த்தி, இலக்கிய அணி மாவட்ட துணை செயலா் ராஜேந்திரன், என். ஜெகவீரபுரம் அமமுக ஊராட்சி செயலா் சுரேஷ், கிளை செயலா் சோலை ராஜ் மற்றும் பல்வேறு மாற்று கட்சிகளை சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து இருந்து விலகி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி ஒன்றிய செயலா் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் தனவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.