Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணி: ஓய்வுபெற்ற காவலா்களுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணி: ஓய்வுபெற்ற காவலா்களுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 14th December 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் பணி ஓய்வுபெற்ற காவல்துறையினா் விண்ணப்பிக்கலாம்.

    அவரவா் குடியிருக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் விண்ணப்பங்களை தாமதமின்றி தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai