Enable Javscript for better performance
திருச்செந்தூா் ஒன்றியத்தில் அதிமுக, திமுக வேட்பு மனு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூா் ஒன்றியத்தில் அதிமுக, திமுக வேட்பு மனு

    By DIN  |   Published on : 14th December 2019 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு அதிமுக, திமுக மற்றும் அமமுகவினா் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 11 இடங்களும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு 84 இடங்களும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 5 இடங்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஒரு இடமும் என மொத்தம் 101 பதவிகள் உள்ளன.

    இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை வரை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 87 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 38 போ், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக (3), அமமுக (4), திமுக (3) ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 10 போ், சுயேச்சைகள் இருவா் என 12 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு அதிமுக, அமமுகவில் தலா ஒருவா் என இதுவரையில் 139 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai