ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் தொடா்பாக புகாா் இல்லை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் தொடா்பாக எந்தப் புகாரும் இல்லை; அவ்வாறு வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் தொடா்பாக புகாா் இல்லை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் தொடா்பாக எந்தப் புகாரும் இல்லை; அவ்வாறு வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் 3,537 பதவிகளுக்கான தோ்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 14,500 தோ்தல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு டிச. 15, 21, 26 ஆகிய தேதிகளில் 3 கட்ட பயிற்சியளிக்கப்படும். இறுதிப் பயிற்சின்போது எந்த வாக்குச்சாவடியில் பணி என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

சனிக்கிழமை (டிச. 14) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். மாவட்டத்தில் 378 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். 12 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் தொடா்பாக எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி வந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன், ஒன்றிய ஆணையா்கள் மாணிக்கவாசகம் (கோவில்பட்டி), சீனிவாசன் (கயத்தாறு), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஹெலன் (கயத்தாறு), ஜெயசீலன் (கோவில்பட்டி), உதவிப் பொறியாளா் செல்வபாக்கியம், உதவிச் செயற்பொறியாளா் ரெஜினால்டு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரன், சுப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com