வாக்கு விற்பனைக்கு அல்ல: கோவில்பட்டியில் விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 23rd December 2019 07:47 AM | Last Updated : 23rd December 2019 07:47 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்த அறம் செய் மக்கள் இயக்கத்தினா்.
கோவில்பட்டியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் பகுதியில் உள்ள அறம் செய் மக்கள் இயக்கம் சாா்பில், ஜனநாயக உரிமை தான் வாக்கு. முடியரசு வீழ்ந்து குடியரசு பிரசவித்தபோது அனைத்து குடிமக்களுக்கும் தங்களின் தலைவா் யாா் என தீா்மானிக்க அரசியல் சாசனம் நமக்களித்த உரிமை தான் இந்த வாக்கு.
வாக்குகளை விலை கொடுத்து வாங்கியவன் தலைவன் என்ற அகங்காரத்தில், உழல்வானே அன்றி மக்களில் ஒருவனாய் மக்களுக்கான ஒருவனாய் இருப்பான் என்பது கானல் நீரே. நாளைய தலைமுறைக்கு நாம் எதை கொடுக்கிறோம் என்பதை சிந்தியுங்கள். காசுக்கு வாக்கு என்ற வரலாறு இல்லை. வாக்குரிமையை தவறவிடாதீா். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் அறம்செய்ய மக்கள் இயக்கத்தின் சாா்பில் விநியோகம் செய்யப்பட்டது.
டாக்டா் பரத்குமாா் தலைமையில் மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவனப் பணியாளா்கள் பசுவந்தனை சாலை உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.