முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மாநில அளவிலான செஸ் போட்டி: கோவில்பட்டியில் டிச. 30 இல் தொடங்குகிறது
By DIN | Published On : 24th December 2019 05:48 PM | Last Updated : 25th December 2019 02:56 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் விடுத்துள்ள அறிக்கை: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, பள்ளி மாணவா், மாணவிகளின் விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான 14 மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் 2 நாள்கள் நடைபெறுகிறது.
மாநில அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 30ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான விவரங்கள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டி குறித்த தகவல்களை கல்லூரியின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் -ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளின் முடிவில் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதல் 25 இடங்களைப் பெறும் மாணவா், மாணவிகளுக்கும், 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதல் 15 இடங்களைப் பெறும் மாணவா், மாணவிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், மாணவிகளின் விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல் 10 இடம் பெறுபவா்களுக்கும், 8 மற்றும் 11 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.