விளாத்திகுளத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
By DIN | Published On : 02nd February 2019 06:50 AM | Last Updated : 02nd February 2019 06:50 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதிகளில் உள்ள கடைகளில், வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி 72 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், விளாத்திகுளம் பேருந்து நிலைய வளாக கடைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 72 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ. 4,500 அபராதம் விதித்தனர்.