விளாத்திகுளத்தில் மதிமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 02nd February 2019 06:53 AM | Last Updated : 02nd February 2019 06:53 AM | அ+அ அ- |

மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலர் மணிராஜ், மேற்கு ஒன்றியச் செயலர் குறிஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சட்டத்துறை செயலர் அரசு அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், இலக்கிய அணி செயலர் மகாராஜன், மாவட்ட மாணவரணிச் செயலர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலர்கள் செல்வராஜ், குருசாமி கிருஷ்ணன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஏஞ்சலா, விளாத்திகுளம் நகரச் செயலர் கோட்டைச்சாமி, கோவில்பட்டி நகரச் செயலர் பால்ராஜ், மாணவரணி நிர்வாகிகள் ரூஸ்வெல்ட், அருண், சீனிவாசன், குருசாமி, காந்தி, தினேஷ், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.