கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்புத் தொகை சேகரிப்பு, கடனுதவி வழங்கும்  விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்புத் தொகை சேகரிப்பு, கடனுதவி வழங்கும்  விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திருச்செந்தூர் சரக கள மேலாளர் முருகன்,  சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   சாத்தன்குளம் ஒன்றிய ஆணையர் செல்வி, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கினார்.  சங்க துணைத்தலைவர் பொன்லிங்கம், நிர்வாகக் குழு உறுப்பினர் மெதோனிஸ், சொக்கன்குடியிருப்பு கூட்டுறவு சங்கச் செயலர் சாலமன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வில்லியம், லிங்கத்துரை, ஜெயசெல்வி,  செல்வி உள்பட பலர்  கலந்துகொண்டனர்.   செயலர் அருள்தாஸ் வரவேற்றார். எழுத்தர் தாமஸ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com