சுடச்சுட

  

  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மாவட்ட  அளவிலான கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.
  உடன்குடி மின்வாரிய மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு,  ஒன்றிய அதிமுக செயலர்  த. மகாராஜா தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.  
  இதில்,  மாவட்ட அளவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 10 ஆயிரம்  ரொக்கம் வெற்றிக் கோப்பையை  தாங்கையூர் செல்வகுமாரும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை மேலராமசாமிபுரம் விஜயராஜூம் வழங்குகின்றனர். மூன்று மற்றும் நான்காமிடம  பெறும் அணிகளுக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராஜதுரை, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் சிறந்த ஆட்ட நாயகன் பரிசை  உடன்குடி 16ஆவது வார்டு செயலர் முருகனும் வழங்குகின்றனர்.
  தொடக்க விழாவில் உடன்குடி நகர அதிமுக செயலர் ஜெயகண்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் மூர்த்தி, உடன்குடி  ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராஜதுரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் வி.பி.சாரதி, வார்டு செயலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  பரிசளிப்பு விழா பிப்.24 ஆம் தேதி நடைபெறும். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன், மாநில அமைப்புச் செயலர் சின்னத்துரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai