சுடச்சுட

  

  திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் வல்லநாடு காசநோய் பிரிவு ஆகியவை சார்பில் , கருங்குளம் வட்டார அளவிலான காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுக் கூட்டம் கீழசெக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சியில், முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம் பங்கேற்று, காசநோய்க்கான அறிகுறிகள், பரவும் முறை ஆகியவை குறித்துப் பேசினார். காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா,  செவிலியர் நிவேதா, மருத்துவமனை பணியாளர் மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai