சுடச்சுட

  

  கயத்தாறு காற்றாலை நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
  கயத்தாறை அடுத்த சீனிவெள்ளாபுரத்தில் தனியார் காற்றாலை உள்ளது. இங்கு திங்கள்கிழமை அதிகாலையில் கதவு உடைக்கப்பட்டு, காப்பர் கேபிள், அலுமினிய கேபிள், ராடு மற்றும் இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  இதுகுறித்து காற்றாலை மேற்பார்வையாளரான திருநெல்வேலி  கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையில் போலீஸார் கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் காப்பர் கேபிள்களை வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், வானரமுட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரகாஷ் (26) என்பதும், சீனிவெள்ளாபுரத்தில் உள்ள காற்றாலையில் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.   இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த காப்பர் கேபிள்கள் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
  அவர் அளித்த தகவலின்பேரில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வானரமுட்டியைச் சேர்ந்த மாரிமுத்து, கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai