சுடச்சுட

  

  கோவில்பட்டியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி P​A​CL முதலீட்டாளர்களுக்கான முதிர்வு தொகையை உடனடியாக வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் தர்னா நடைபெற்றது. 
  இந்த தர்னா மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு  சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் முருகன்,  சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி,  மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,  சிஐடியூ தொழிற்சங்கத்தினர், P​A​CL முதலீட்டாளர்கள்,  கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முகவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.  
  இந்த தர்னா மற்றும் ஆர்ப்பாட்டத்தை கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ் தொடங்கி வைத்தார்.  P​A​CL  களப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜோதி முடித்து வைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai