சுடச்சுட

  

  கோவில்பட்டி பிரதான சாலையில் புதன்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:   கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணியையடுத்து,  மேற்கு மின் விநியோகப் பிரிவிற்கு உள்பட்ட பிரதான சாலை பத்மா கிளினிக் முதல் ரகுராம் திருமண மண்டபம் வரை மற்றும் சீனிவாசா அக்ரகாரத் தெரு பகுதிகளில் புதன்கிழமை (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai