சுடச்சுட

  

  கோவில்பட்டி, சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி சபைக் கூட்டம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி ஒன்றியம், இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, மந்தித்தோப்பு கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. 
  இக்கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய திமுக செயலர் வீ.முருகேசன் தலைமை வகித்தார். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார். அப்போது, சீரான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, கழிவுநீர் வசதி, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தினர். கோரிக்கை குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகாணப்படும் என பேரவை உறுப்பினர் தெரிவித்தார்.
  ஒன்றியத் துணைச் செயலர் சந்திரசேகர், அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம், தாமரைமொழி, விஜயராமபுரம், பண்டாரபுரம், அமுதுண்ணாக்குடி ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு, ஊராட்சிச் செயலர்கள் கணபதிபாண்டியன், தங்கவேல், செளந்திரபாண்டி, அன்பரசு ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலர் ஏ.எஸ். ஜோசப் முன்னிலை வகித்தார். கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார்,  பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai