சுடச்சுட

  

  தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சீமென்ஸ் கமோசா காற்றாலை நிறுவனம் சார்பில், கால்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  
  முகாமை தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் தொடங்கிவைத்து கால்பந்தாட்ட உபகரணங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார்.  முகாமில், புனித லாசல் மேல்நிலைப் பள்ளி 60 வீரர்களும்,  திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 15 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். தொடர்ந்து,  கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ், புனித லசால் பள்ளி தாளாளர் கென்னடி, தலைமையாசிரியர் ஹெல்டன்,  உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார்,  தர்மர் மற்றும் சீமேன்ஸ் கமோசா நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
   இதுகுறித்து சீமென்ஸ் கமோசா நிறுவன நிர்வாகி அருண் பிரசாத் கூறுகையில், கால்பந்து பயிற்சி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி லசால் பள்ளியில் நடைபெற்று வருகிறது.  இதுவரை 750-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பு கால்பந்தாட்ட பயிற்சி பெற்று சிறந்த வீரர்களாக உருவாகியுள்ளனர். மேலும் தற்போது புனித லசால் பள்ளியில் பயின்று வரும் முருகன், திலீபன் மற்றும் ஸ்னோசன் ஆகிய 3 மாணவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்றனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai