சுடச்சுட

  

  தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கணிதவியல்  கருத்தரங்கம்   நடைபெற்றது.
  தூய மரியன்னை  கல்லூரியில், கணிதத் துறை சார்பில், உயர் கணிதத்துக்கான தேசிய குழு நிதியுதவியுடன்  "வளர்ந்து  வரும்  மேம்பட்ட  கணிதவியல்  போக்குகள்' என்ற  தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
  தொடக்க விழாவுக்கு, கல்லூரிச் செயலர் புளோரா மேரி தலைமை வகித்தார். முதல்வர் லூசியா ரோஸ் முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது.  கருத்தரங்க நோக்கம் குறித்து கணிதத்துறை தலைவர் புனிதா தாரணி பேசினார். தொடர்ந்து, மணிப்பால் பைஜூ, திருச்சி தேசிய நுட்ப நிறுவனம் லட்சுமணி கோமதி நாயகம், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மருதை, சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் விஜயராஜ், கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் ஆசிஷ் அவஸ்தி, திருச்சி தூய வளனார் கல்லூரி பேராசிரியை கீதா சிவராமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். 
  இதில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai