சுடச்சுட

  

  தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்,  மாணவிகளுக்கான மனநல மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஆண்டோ ரூபன் தலைமை வகித்தார்.  உதவித் தலைமையாசிரியர் மாரிபாண்டி, உடற்கல்வி ஆசிரியர் ரவிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில்,  மாணவர்,  மாணவிகள் பொதுத்தேர்வுகளை உற்சாகத்துடன் எழுதுவது,  தேர்வுக்கு தயாராவது, கேள்விதாள் வினாக்களை கவனமுடன் எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு மனநலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்களை மனநல மருத்துவர் விஜயன் எடுத்து கூறினார்.  
  தொடர்ந்து மாணவர்,  மாணவிகளுக்கு விநாடி- வினா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஆசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai